
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது தோல்வியைத் தழுவி தொடர்ந்து 7ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், பந்துவீச்சில் கூடுதல் ரன்களை வழங்கியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், “பந்துவீச்சில் சுமார் 15-20 ரன்கள் அதிகம். நாங்கள் வேகத்தைத் தக்கவைக்க விரும்பும் போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்தோம், நானும் ஹெட்மியரும் பேட்டிங் செய்யும் போது இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் எனது விக்கெட் ஆட்டத்தை மாற்றியது. இந்த போட்டியில் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பின்னர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்துவீசி ஷுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியது சாதகமாக இருந்தது.