எப்போதும் எங்களுடைய 100% உழைப்பை கொடுக்க விரும்புகிறோம் - ஹர்மன்பிரீத் கவுர்!
நாங்கள் எப்பொழுதும் எங்கள் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டியது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறோம் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிக்ளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணியில் புரூக் ஹாலிடே மற்றும் ஜார்ஜியா பிளிம்மரை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Trending
இதில் அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 86 ரன்களையும், ஜார்ஜியா பிளிம்மர் 39 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா தனது சதத்தையும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரைசதமும் அடித்து அசத்த இந்திய அணியின் வெற்றியும் எளிதானது.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 44.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 100 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்பீரித் கவுர் 59 ரன்களையும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், “இப்போட்டிக்கு முன்னதாக நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்தோம், இன்று நாங்கள் செயல்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். நாங்கள் விளையாடும் போதெல்லாம், எப்போதும் எங்களுடைய 100% உழைப்பை கொடுக்க விரும்புகிறோம், ஆனால் சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் செல்லாது. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக நீங்கள் உங்களைத் தள்ளிக்கொண்டே இருக்க வேண்டும்.
அணி கூட்டத்தில் கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்த விஷயங்களைப் பற்றி விவாதித்த பிறகு, மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணத்தில் ஸ்மிருதி மந்தனாவை பாராட்ட விரும்புகிறேன். இப்த தொடரின் ஆரம்பத்தில் அவர் சிரமப்பட்டார், ஆனால் அதன்பின் அவர் தனது ஃபார்மிற்கு திரும்பியதன் மூலம் இப்போட்டியில் ரன்களை எடுக்க முடிந்தது. இந்தத் தொடரை எப்படி வேண்டுமானாலும் வெல்ல வேண்டும் என்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று நினைத்தோம். அதற்கேற்றவகையிலேயே நாங்கள் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியில் பங்காற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் நாங்கள் எப்பொழுதும் எங்கள் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டியது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறோம். கூடிய விரைவில் நாங்கள் சிறந்த பீல்டிங் பக்கமாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now