ரெஹான் அஹ்மதிற்கு கூடிய விரைவில் விசா கிடைத்துவிடும் - பென் ஸ்டோக்ஸ்!
மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே ரெஹானுக்கு விசா கிடைக்கும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில்முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் சமபலத்துடன் மோதி வருவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறுவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
முன்னதாக இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி வீரர்கள் அபுதாபியில் பயிற்சி மேற்கெண்டு சில தினங்களுக்கு முன்பு இந்தியா திரும்பினார். அப்போது இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹ்மத் விசாவில் பிரச்சனை இருப்பதாக கூறி விமானநிலைய அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவருக்கு தற்காலிக விசாவை வழங்கியதுடன், புதுபிக்கப்பட்ட விசாவை உடனடியாக பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “ஒவ்வொரு தனிமனிதரும் விசாவுக்காக காத்திருப்பது என்பது எப்போதும் ஒரு கவலையான காலக்கட்டம் தான். ஆனால் அதிர்ஷ்டவசமாக ரெஹான் அஹ்மதிற்கு தற்காலிக விசா கிடைத்துவிட்டது. மேலும் அவருக்கு தற்காலிக விசா வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி. அதேசமயம் பிசிசிஐ மற்ரும் அரசு உடனடியாக ரெஹான் அஹ்மதிற்கான விசாவை விரைவில் ஏற்பாடு செய்யும் என எதிர்பார்கிறேன்.
இதனால் அந்த பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் போட்டி தொடங்குவதற்கு முன்பே ரெஹானுக்கு விசா கிடைக்கும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக விசா பிரச்சனை காரணமாக இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் சோயப் பஷீர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now