இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் திருப்தி அடைகிறோம் - ஹர்திக் பாண்டியா!
ரோஹித், தீபக், போல்ட், சூர்யா என அனைவரும், அனைவரும் தற்போது தங்களுடைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான வெற்றியாக அமைந்துள்ளது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்று மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 71 ரன்களையும், அபினவ் மனோகர் 43 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணி தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரிக்கெல்டன் 11 ரன்னிலும், ஜேக்ஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா 70 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “மீண்டும் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ரோஹித், தீபக், போல்ட், சூர்யா என அனைவரும், அனைவரும் தற்போது தங்களுடைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான வெற்றியாக அமைந்துள்ளது. அணியை வழிநடத்து என்பது எப்போது உள்ளுணர்வை அடிப்படையாக கொண்டதாகும், அதனால் நான் போட்டிக்கு ஏற்றவாறு செயல்பட விரும்புகிறேன்.
Also Read: LIVE Cricket Score
என்னைப் பொறுத்தவரையில் முன்பே தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு பதிலாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு திட்டங்களை செயல்படுத்த விரும்புவேன். எல்லா துறைகளிலும் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும், அதனால் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும், தர்க்கரீதியாகவும் மிகவும் புத்திசாலியாகவும் இருப்பது பற்றி விவாதித்தோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாம் அதை எடுத்துக்கொள்வோம். இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் திருப்தி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now