சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஷனான் கேப்ரியல்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஷனான் கேப்ரியல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியானது சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன், தென் ஆப்பிரிக்க அணியையும் ஒயிவாஷ் செய்து அசத்தியது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த ஷனான் கேப்ரியல் கடந்த சில ஆண்டுகளாகவே அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார். இந்நிலையில், தொடர்ச்சியாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால் ஷனான் கேப்ரியல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
Trending
தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய அவர், “வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட என்னை அர்ப்பணித்துள்ளேன். இந்த அன்பான விளையாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது, ஆனால் அனைவரும் சொல்வது போல், எல்லா நல்ல விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வர வேண்டும். இன்று, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமான ஷனான் கேப்ரியல் இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 166 விக்கெட்டுகளையும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு இவர் கடந்தாண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now