
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயன டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு தொடர்களிலும் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டி20 வீரர்களுக்கான புதுபிக்கட்டப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணியின் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் தக்கவைத்துள்ளனர். இதுதவிர்த்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6ஆம் இடத்தில் தொடரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ஆஸ்திரேலிய டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 4 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் ஜோஷ் இங்கிலிஸ் ஒரு இடம் முன்னேறி 15ஆவது இடத்தையும், ஆஃப்கனிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 18ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதுதவிர்த்து வெஸ்ட் இண்டீஸின் பிராண்டன் கிங் 4 இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தையும், சஞ்சு சம்சன் 3 இடங்கள் முன்னேறி 32ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.