
AUS vs WI Playing XI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 25) பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்வியைச் சந்தித்த கையோடுயும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் ரோஸ்டன் சேஸ் தலைமையிலும் இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரு அணிகளுக்கும் முதல் தொடராகவும் அமைந்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.