
வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரில் படுமோசமான தோல்வியைத் தழுவியதுடன் ஒயிட் வாஷும் ஆனது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்ததாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமாயம் நடைபெற்று வரும் 2023-25ஆம் அண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் கடைசி தொடராகவும் இது அமைந்துள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.