
கடந்த இரண்டு நாட்களாக விராட் கோலி மற்றும் காம்பீர் இடையேயான வாக்குவாதம்தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார். நேற்று முழுவதும் என்னதான்யா பிரச்சனை..? எதுக்குய்யா இப்படி சண்டை போட்டீங்க..? யாராவது தெரிஞ்சா சொல்லுங்கையா என ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
லக்னோ அணியை சேர்ந்த நவீன் உல் ஹக் மற்றும் கோலி இடையேயான மோதலானது இரண்டாவது இன்னிங்ஸின் 16ஆவது ஓவரில் இருந்து தொடங்கியது. 17ஆவது ஓவரின் முடியும்போது கோலி பிட்சில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நவீன் இதுகுறித்து நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி, நவீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அமித் மிஸ்ரா தடுத்தாக கூறப்படுகிறது.
போட்டி முடிந்த பிறகு, நவீன் மற்றும் விராட் இருவரும் கைகுலுக்கும்போது மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதன்பிறகு, லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய நவீனை அழைத்தார். ஆனால், நவீன் கோலியுடன் பேச மறுத்து அங்கிருந்து சென்று விட்டார். அந்த வீடியோவும் இணையத்தில் பரவி வைரலானது.