
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கிரிக்கெட்டை எடுத்து செல்லும் வகையில் டிஎன்சிஏ திறமையாளர்கள் கண்டறியும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் திறன்களை கண்டறியவும், பந்து வீச்சாளர்கள் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் 14 முதல் 24 வயதிற்கு உட்பட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கான சிறப்பு தேர்வு 13 மாவட்ட மையங்களில் நடைபெற உள்ளது அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் வரை இந்த தேர்வை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யபடும் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக பயிற்சி அளித்து அவர்களை தமிழ்நாடு அணிக்கு அழைத்து வரும் அளவிற்கு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு திட்டம் குறித்த அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசுகையில், "தமிழகத்தில் நிறைய வீரர்கள் இருந்தும் இந்திய அணிக்கு செல்லவில்லை என தொடர்ச்சியாக வரும் விமர்சனங்களை பார்த்து வருகிறோம். ஆனால் இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களை எடுத்து பார்த்தால் அவர்கள் ரஞ்சி கோப்பை போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி இருப்பார்கள். மும்பை வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என தொடர்ந்து அரசியல் நோக்கில் பார்க்க கூடாது. மும்பை அணி 45 முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. நாமும் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு நிறைய வீர்ரார்கள் செல்ல வாய்ப்புள்ளது.