
இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி ஹைதராபாத்தில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர் கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 52 ரன்களை குவித்து அசத்தினார். அடுத்து பிஞ்ச் 7 , ஸ்டீவன் ஸ்மித் 9, மேக்ஸ்வெல் 6 ஆகியோர் சொதப்பிய நிலையில் அடுத்து இங்லீஸ் 24, டிம் டேவிட் 54, டேனியல் சாம்ஸ் 28 ஆகியோர் சிறப்பாக விளையாடியால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கேஎல்ராகுல் 1, ரோஹித் ஷர்மா 17 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விராட் கோலி 63, சூர்யகுமார் யாதவ் 69 , ஹார்திக் பாண்டியா 25 ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக கடைசி ஓவருக்கு 11 ரன்கள் தேவைப்பட்டபோது டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் முதல் பந்தில் கோலி சிக்ஸர் அடித்து ஆட்டமிழந்தப் பிறகு தினேஷ் கார்த்திக் ஒரு சிங்கில் எடுத்தார்.