
பிசிசிஐ தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி முடிந்த அடுத்த நாளே யாரும் எதிர்பார்க்காத விதமாக விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஏற்கனவே அவர் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டும் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்தும் பிசிசிஐ அவரை நீக்கி இருந்தது. புதிய கேப்டனை தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், இந்திய தேர்வாளர்கள் புதிய கேப்டன் பற்றிய தகவலை விரைவில் கூறுவார்கள், தற்போது வரை யார் பெயரையும் அவர்கள் கூறவில்லை.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்தபிறகு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. தற்போது ரோஹித் சர்மா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கோலிக்கு அடுத்து கேஎல் ராகுலுக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட உள்ளது என்று செய்திகள் வருகின்றன.