-mdl.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பின் ஆடிய இந்தியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது.
இந்திய அணியின் தோல்விக்கு டாப் ஆர்டர் முழுவதும் சொதப்பியதே காரணம். எனினும் விராட் கோலி மீதுதான் அதிக விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ரோஹித் சர்மா (0), ஷிகர் தவான் (6), ரிஷப் பந்த் (0) என அடுத்தடுத்து வெளியேறியதால், கோலி தான் அணியை காப்பாற்ற வேண்டிய சூழலில் இருந்தார். அதற்கேற்றார் போல அடுத்தடுத்து பவுண்டரிகள் பறந்தன.
ஆட்டத்தை தொடங்கியவுடனே ஆஃப் ட்ரைவ், ஆன் ட்ரைவ், கவர் ட்ரைவ் என மிகவும் புத்துணர்ச்சியுடன் ஆடிய விராட் கோலி, விக்கெட்கள் சரிவதை கண்டு பதற்றமடைந்தார். இதனால் 16 ரன்களுக்கெல்லாம் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் கோலி சதமடிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் கிடைத்தது.