
WI vs AUS Test Series: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக சாம் கோன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவியதுடன், நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்த்தையும் இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் சோபிக்க தவறியதே அந்த அணியின் இந்த தோல்விக்கான மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோர் சோபிக்க தவறினர். குறிப்பாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வாய்ப்பை பெற்றிருந்த லபுஷாக்னே இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 39 ரன்களையும், மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 6 ரன்களை, கேமரூன் க்ரீன் 4 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தனர்.