அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு!
அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரான ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் முதலில் தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரராக ரஹ்மனுல்லா குர்பாஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 38 ஒருநாள் போட்டிகளிலும், 52 டி20 போட்டிகளிலும் விளையாடிவுள்ள ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது அறிமுக டெஸ்ட் வாய்ப்பை பெற்றுள்ளார். அதேசமயம் காயத்தை சந்தித்துள்ள ரஷித் கான் இத்தொடரிலும் இடம்பெறவில்லை.
Trending
மேலும், காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகிய யாமின் அஹ்மத்ஸாய் மற்றும் முகமது சலீம் சஃபி ஆகியோருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் கலில் குர்பாஸ், இப்ராஹிம் அப்தெல் ரஹீம்ஸ் ஆகியோருக்கு ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுடன் ரஹ்மத் ஷா, கரீம் ஜானத், இகம் அலிகில், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கே), ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நூர் அலி ஸத்ரான், அப்துல் மாலிக், பஹீர் ஷா, நசீர் ஜமால், கரீம் ஜனத், கலீல் குர்பாஸ், ஜாஹிர் கான், ஜியா உர் ரஹ்மான் அக்பர், நிஜாத் மசூத், இப்ராஹிம் அப்துல்ரஹிம்சாய் மற்றும் நவீத் சத்ரான்.
Win Big, Make Your Cricket Tales Now