ரோஹித் சர்மாவை இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம் - ரிக்கி பாண்டிங்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ரோஹித் சர்மா மீண்டும் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கொன்ஸ்டாஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார்.
Trending
அதேசமயம் உஸ்மான் கவாஜா 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் கொன்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 176 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக இப்போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து இப்போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மீண்டும் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா அணி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. எனது கணிப்பின் படி எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்பாக இந்திய அணி எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் விளையாடப்போவதில்லை. அதனால் ரோஹித் சர்மா அவரது கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் உள்ளார். அவர் இந்தியவின் மிகவும் அற்புதமான வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் மீண்டும் இந்தியவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம்” என்று கூறியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடிய 3 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே 30 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக அவரின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் அதிகரித்த நிலையில் இப்போட்டியில் அவர் விலகினார். இந்திய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், 12 சதம் 18 அரைசதங்களுடன் 4301 ரன்களைச் சேர்த்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now