விஸ்டன் வருடாந்திர வீரர் பட்டியலில் இந்திய வீரர்கள்!
விஸ்டன் வருடாந்திர இதழில் முன்னணி கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் தகவல்களை அடங்கிய விஸ்டன் என்கிற மாத இதழ் இங்கிலாந்தில் வெளியாகி வருகிறது. இதன் வருடாந்திர இதழில் கடந்த வருடம் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குக் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை ஸாக் கிராவ்லி, ஜேசன் ஹோல்டர், முகமது ரிஸ்வான், டாம் சிப்லி, டேரன் ஸ்டீவன்ஸ் ஆகியோர் சிறந்த ஐந்து வீரர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் இந்த வருடத்துக்கான சிறந்த ஐந்து வீரர்களாக பும்ரா, கான்வே, ஆலி ராபின்சன், ரோஹித் சர்மா, டேன் வான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் சமீபத்தில் இங்கிலாந்து கேப்டன் பதவியை ராஜிநாமா செய்த ஜோ ரூட், முன்னணி கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2021இல் 15 டெஸ்டுகளில் 1708 ரன்கள் எடுத்தார் ரூட், அவரது சராசரி - 61.00. கடந்த வருடம் இங்கிலாந்தில் விளையாடிய டெஸ்ட் தொடரில் பும்ரா 19 விக்கெட்டுகளும் ரோஹித் சர்மா 368 ரன்களும் எடுத்தார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now