
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார். சிறந்த ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில், தொடக்க வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக 3ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது.