
இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதன்படி நடப்பு மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 20ஆம் தேதியும், டெஸ்ட் தொடரானது ஜனவரி 30ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. ஹீதர் நைட் தலைமையிலான இந்த அணியில் ஆல்-ரவுண்டர் ஃப்ரேயா கெம்ப் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் லின்ஸி ஸ்மித் ஆகிய அறிமுக வீராங்கனைகள் இங்கிலாந்து மகளிர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மகளிர் ஆஷஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலிச ஹீலி தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சோஃபி மோலினக்ஸ் காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜார்ஜியோ வோல் மீண்டும் தனது இடத்தை உறுதிசெய்துள்ளார்.