மகளிர் பிரீமியர் லீக் 2025: விருதுகளை வென்ற வீராங்கனைகள் பட்டியல்!
நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விருதுகளை வென்ற வீராங்கனைகளின் முழு பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் சோபிக்க தவறினர்.
Trending
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மரிஸான் கேப் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக டபிள்யூபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதித்துள்ளது. இதையடுத்து கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு பிறகு வழங்கப்பட்ட விருதுகள் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.
- இறுதிப்போட்டிக்கான ஆட்டநாயகி விருது - ஹர்மன்பரீத் கவுர்
- நடப்பு சீசனுக்கான தொடர் நாயகி விருது - நாட் ஸ்கைவர் பிரண்ட்
- இந்த சீசனுக்கான மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது - நாட் ஸ்கைவர்-பிரண்ட்
- அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை (ஆரஞ்சு தொப்பி) - நாட் ஸ்கைவர் பிரன் (523 ரன்கள்)
- அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை (ஊதா தொப்பி) - அமெலியா கெர் (18 விக்கெட்டுகள்)
- வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருது - அமன்ஜோத் கவுர்
- அதிக ஸ்ட்ரைக் ரேட்டுக்கான விருது - சினெல்லே ஹென்றி
- சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனை - ஆஷ்லே கார்ட்னர்
- சீசனின் சிறந்த கேட்சுக்கான விருது - அன்னபெல் சதர்லேண்ட்
- அதிக டாட் பந்துகளை வீசிய் வீராங்கனை - ஷப்னிம் இஸ்மாயில்
- பவர் பிளேவில் சிறப்பக செயல்பட்ட அணிக்கான விருது - குஜராத் ஜெயண்ட்ஸ்
Win Big, Make Your Cricket Tales Now