
மகளிர் டி20 உலக கோப்பைத் தொடரின் 8ஆவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆபிரிக்க அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன!
இன்று தென் ஆப்பிரிக்கா கேப் டவுன் மைதானத்தில் முதல் அரை இறுதியில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் விக்கட்டுக்கு 52 ரன்கள் சேர்க்க அலைசா ஹீலி வெளியேறினார். மற்றுமொரு துவக்க வீராங்கனை மூனி அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் மேக் லானிங் 34 பந்தில் 49 ரண்களும், கார்டனர் 18 பந்தில் 31 ரண்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி நான்கு விக்கட்டுகள் இழப்பிற்கு 172 ரண்கள் சேர்த்தது.