
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் இதே தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற மகளிர் அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்தியா அந்த புத்துணர்ச்சியுடன் இத்ததொடரிலும் கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் வழக்கம் போல லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றுக்கு சென்ற இந்தியா வலுவான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொஞ்சமும் முன்னேறாத அதே பழைய சொதப்பலை வெளிப்படுத்தி 5 ரன்கள் வித்தகத்தில் போராடி தோல்வியடைந்து வெளியேறியது. நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாரான ஃபீல்டிங் மற்றும் கடைசி நேரத்தில் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியாவை சிறப்பாக எதிர்கொண்டு 20 அவர்களின் 172/4 ரன்கள் சேர்த்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஸ்மிரிதி மந்தனா, சபாலி வர்மா வர்மா, யாஸ்திகா பாட்டியா ஆகிய டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால 21/3 என சரிந்த இந்தியாவை 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஜெமிமா ரோட்ரிகஸ் 43 (24) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருடன் 52 (34) ரன்கள் குவித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக செயல்பட்டதால் 33 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது.