நான் அழுவதை எனது நாடு பார்க்கக்கூடாது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நான் அழுவதை எனது நாடு பார்க்க கூடாது என்பதற்காக நான் கண்ணாடியை அணிந்துள்ளேன் என்று ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 52 ரன்கள் குவித்தது. அலைஸா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட்டிங் விளையாடிய பெத் மூனி அரைசதம் அடித்தார். பெத் மூனி 37 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் லானிங் நிதானமாக ஆடி 34 பந்தில் 49 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். ஆஷ்லே கார்ட்னெர் 18 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.
Trending
இதைத் தொடர்ந்து 173 ரன்களை கடின இலக்காக கொண்டு இந்திய மகளிர் அணி விளையாடியது. இதில், தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா (9) மற்றும் ஸ்மிருதி மந்தனா (2) இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களத்திற்கு வந்த யஸ்டிகா பாட்டியா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர்.
ஜெமிமா 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 34 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் அடித்து அவரும் தனது கடமையை செய்து முடிக்காமல் ரன் அவுட்டானார். அதன்பின்னர் ரிச்சா கோஷ் (14), தீப்தி ஷர்மா (20), ஸ்னே ராணா (11) ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்து கடைசிவரை போராடியும் 20 ஓவரில் இந்திய மகளிர் அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் தொடரை விட்டு இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறியது. இதற்கு முன்னதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரையும் இழந்தது. 20202 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையையும் இழந்தது. 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பையையும் இழந்தது. தற்போது டி20 உலகக் கோப்பை தொடரையும் இழந்துள்ளது.
இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “இந்த தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். மீண்டும் நாட்டை இது போன்று தோல்வியடைச் செய்யமாட்டோம். நான் அழுவதை என் நாடு பார்க்க விரும்பவில்லை. ஆகையால் தான் நான், இந்த கண்ணாடியை அணிந்துள்ளேன்.
போட்டியின் கடைசி பந்து வரையில் நாங்கள் போராட வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால், அது எங்களால் முடியாமல் போய்விட்டது. நான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகிவிட்டேன். ஜெமி சிறப்பாக விளையாடினாள். எனினும், நாங்கள் நன்றாகவே விளையாடினோம். நாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வோம்” என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். ஏற்கனவே இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now