
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா தனது 2ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை இன்று எதிர்கொள்கிறது.
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வர்ம் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய விண்டீஸ் அணியில் கேப்டன் ஹெலி மேத்யூஸ் 2 ரன்களில் ஆடமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டெஃபானி டெய்லர் - காம்பெல்லே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 30 ரன்களில் காம்பெல்லே ஆட்டமிழக்க, அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெஃபானி டெய்லர் 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.