டி20 உலகக்கோப்பை நடத்தும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த தீவிரவாத அமைப்பு!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பு ஒன்று தீவிரவாத தாக்குதலுக்கான மிரட்டலை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
மேலும் இத்தொடருக்கான போட்டிகள் அமெரிக்காவில் உள்ள டெல்லாஸ், ஃபுளோரிடா மற்றும் நியூயார்க் நகரங்களிலும், வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானா, பார்போடாஸ், ஆண்டிகுவா, டிரினிடாட், செயிண்ட் வின்செண்ட் மற்றும் செயிண்ட் லூசியாவில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை நாடைபெறும் வெஸ்ட் இண்டீஸிற்கு வடக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பு ஒன்று தீவிரவாத தாக்குதல் மிரட்டலை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Trending
இந்நிலையில் இதுகுறித்து ஐசிசி அதிகாரிகள் கூறுகையில், “நாங்கள் போட்டிகளை நடத்தும் நாடு மற்றும் நகரங்களின் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம், மேலும் எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க ஒரு விரிவான திட்டத்தின்படி முன்னேறி வருகிறோம். டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைவரின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை என்பதை நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம். மேலும் எங்களிடம் ஒரு விரிவான மற்றும் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது” என தெரிவித்துள்ளனர்.
உலகின் பல முன்னணி நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை நடத்தும் நாடுகளுக்கு தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி வீரர்கள் மீது தீரவாத தாக்குதல் நடத்தப்பட்டதின் விளையவாக பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டு, தற்போது அந்த தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now