
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா தலா 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து ஷுப்மனுடன் இணைந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் அதிரடி காட்டத் தொடங்கிய ஷுப்மன் கில் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய போது 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 79 ரன்கள் எடுத்து காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பி மருத்துவ உதவிபெற்றார்.