
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி அஹ்மதாபாத் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 47 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தார். இதனால் 81/3 என ஆரம்பத்தில் தடுமாறிய இந்தியாவுக்கு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடினர்.
அந்த வகையில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 29 ஓவர்கள் வரை 4ஆவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்மன்ஷிப் அமைத்து ஓரளவு இந்தியாவை காப்பாற்றிய போது விராட் கோலி 54 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலைமையில் வந்த ரவீந்திர ஜடேஜாவும் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராகுல் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 66 ரன்களில் நேரத்தில் ஆட்டமிழந்து மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.