
World knows Afghanistan have good spinners like Rashid, Mujeeb: Mohammad Nabi (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் விளையாடியன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணி ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 60 ரன்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் முஜீப் உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி, “ரஷித் மற்றும் முஜீப் வடிவில் எங்களிடம் சில நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர் என்பது உலகம் அறிந்ததே, அவர்கள் உலகின் எல்லா இடங்களிலும் விளையாடியிருக்கிறார்கள். எங்களிடம் ஒரு நல்ல குழு உள்ளது.