
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இதையடுத்து இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி மகளிர் அணியின் கேப்டன் மெக் லேனிங் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் ரன் கணக்கை தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஷெஃபாலி வர்மா ஒவ்வொரு பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்காமல் ஒவ்வொருவரது ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி தள்ளினர். தொடக்க வீராங்கனைகள் இருவரும் அதிரடி காட்டி விளையாட முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தனர்.
அதன்பின் மெக் லேனிங் 43 பந்துகளில் 14 பவுண்டரிகள் உள்பட 72 ரன்கள் அடித்தார். ஷெஃபாலி வர்மாவும் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 4 சிக்சர்கள் 10 பவுண்டரிகள், உள்பட 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.