
மகளிர் பிரீயர் லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ர யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை வழக்கம் போல் தனங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியிலும் ரசிகர்களுக்கு விருந்துபடைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மரிசேன் கேப் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த கேப்டன் மெக் லெனிங் இப்போட்டியிலும் அரைசதம் கடந்ததுடன், நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியளிலும் முதலிடத்திற்கு முன்னேறினார். அதன்பின் 70 ரன்கள் எடுத்திருந்த மெக் லெனிங் விக்கெட்டை இழந்தார்.