WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக மெக் லெனிங் நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக மெக் லெனிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வருடம் முதல் தொடங்கும் மகளிருக்கான இந்திய டி20 லீக் போட்டியான மகளிர் பிரீமியர் லிக்-ல் ஆகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. இத்தொடர் மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இத்தொடருக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது.
Trending
இந்நிலையில் மார்ச் 4 அன்று தொடங்கும் டபிள்யூபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதவுள்ளன. மும்பையில் உள்ள டிஒய் படேல் விளையாட்டுத் திடலில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்திய நேரம் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
இந்நிலையில் டபிள்யூபிஎல் போட்டியில் விளையாடும் ஐந்து அணிகளின் கேப்டன்களும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். கடைசியாக டெல்லி அணி தனது கேப்டனை இன்று அறிவித்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக் லேனிங் கேப்டனாகவும், ஜெமிமா ரோட்ரிகஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங், 2014, 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையையும் 2022ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்று அதிக ஐசிசி பட்டங்களை (5) வென்ற கேப்டன் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதனால் டெல்லி அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
WPL 2023 போட்டியின் கேப்டன்கள் பட்டியல்
- ஆர்சிபி - ஸ்மிருதி மந்தனா
- உபி வாரியர்ஸ் - அலிஸா ஹீலி
- மும்பை இந்தியன்ஸ் - ஹர்மன்ப்ரீத் கெளர்
- குஜராத் ஜெயண்ட்ஸ் - பெத் மூனி
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - மெக் லேனிங்
Win Big, Make Your Cricket Tales Now