
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரைவிட்டு வெளியேறின.
மும்பை இந்தியன்ஸை வீழ்த்த, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த நிலையில், மும்பை அணி ஆர்சிபியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது. இந்நிலையில், கடைசி லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெயித்து முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டியில் முன்னேறும் முனைப்பில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்பை முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஹைலீ மேத்யூஸ் 36 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஷ்வேதா செராவத் 12 பந்தில் 19 ரன்கள் அடித்தார். 4ஆம் வரிசையில் இறங்கிய டாலியா மெக்ராத் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 32 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 58 ரன்களை விளாசினார். மற்ற யாருமே சரியாக ஆடாததால் 20 ஓவரில் 138 ரன்கள் அடித்தது யுபி வாரியர்ஸ் அணி.