
மகளிர் பிரீமியர் லீக்கின் முதலாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இனங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தனர்.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் தந்தது. இன்னிங்ஸின் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டினர். அதிலும் ஷஃபாலி வர்மா தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி தள்ளினார்.
அவருடன் இணைந்து விளையாடிய மெக் லெனிங்கும் மிரட்ட அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுமுனையிலிருந்த மெக் லெனிங்கும் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக செயல்பந்த இந்த இணையை பிரிக்க முடியாமல் ஆர்சிபி வீராங்கனைகள் தட்டுதடுமாறி நின்றனர்.