
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே மற்றும் கிரேஸ் ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிரண் நவ்கிரே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கிரேஸ் ஹாரிஸுடன் ஜோடி சேர்ந்த விருந்தா தினேஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் கிரேஸ் ஹேரிஸ் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களைச் சேர்த்திருந்த விருந்தா தினேஷும் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தீப்தி சர்மா நான்கு ரன்னிலும், தஹ்லியா மெக்ராத் ஒரு ரன்னிலும், ஸ்வேதா செஹ்ராவத் 19 ரன்னிலும், உமா சேத்ரி 13 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் நாட் ஸ்கைவர் 3 விக்கெட்டுகளையும், சப்னைம் இஸ்மைல், சமஸ்கிருதி குப்தா ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.