
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியிலேயே ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்க தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதி முடிவை தீர்மானிக்கும் கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
குறிப்பாக டெல்லி அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தை எதிர்கொண்ட அருந்ததி ரெட்டி பந்தை ஆஃப் சைடில் அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சி செய்ததுடன் நூழிலையில் ரன் அவுட்டில் இருந்தும் தப்பி டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது இன்னிங்ஸின் கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் மெக் லெனிங், “இதுபோன்ற மன அழுத்தம் நிறைந்த நாள் ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன். முதலில் மும்பை அணி பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்ம் போது அவர்கள் 200 ரன்களை எட்டுவது போல் இருந்தனர். ஆனால் ஷிகா பாண்டே சிறப்பாக பந்துவீசி எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டுவந்தார்.