Advertisement

WTC 2023 Final: இமாலய இலக்கை நிர்ணயிக்கும் முயற்சியில் ஆஸி; கட்டுப்படுத்துமா இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது.  

Bharathi Kannan
By Bharathi Kannan June 10, 2023 • 17:13 PM
WTC 2023 Final: Australia are setting up a massive target as lunch on Day 4 arrives!
WTC 2023 Final: Australia are setting up a massive target as lunch on Day 4 arrives! (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தற்போது ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்துள்ளன. இதன் மூலமாக 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தற்போது 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

இதில், டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஷ் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில், ஸ்டீவ் ஸ்மித் இறங்கி அடிக்க முற்பட்டு ரவீந்திர ஜடேஜா பந்தில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று டிராவிஸ் ஹெட்டும் ஆட்டமிழந்தார். அவர் 18 ரன்களில் வெளியேறினார்.

Trending


அடுத்து கேமரூன் க்ரீன் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 3ஆவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து க்ரீன் மற்றும் லபுஷேன் இருவரும் 4ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், லபுஷேன் வந்த வேகத்தில் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடந்து க்ரீனும் 25 ரன்களில் வெளியேறினார்.

அதன்பின் அலெக்ஸ் கேரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினார். அவருக்கு துணையாக மிட்செல் ஸ்டார்க்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். இதன்மூலம் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது.

இதில் அலெக்ஸ் கேரி 41 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 371 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement
Advertisement