WTC 2023: ஷுப்மன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
மூன்றாவது நபரின் முடிவை தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்த ஷுப்மன் கில் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த தொடரில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி இன்று அபராதம் விதித்துள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலியாவுக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Trending
மேலும், நடுவர் தனக்கு அவுட் கொடுத்தது குறித்து வெளிப்படையாக விமர்சித்ததற்காக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில்லுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2021 டிசம்பரில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இதே தவறுக்காக போட்டி கட்டணத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3ஆவது நடுவரின் முடிவை விமர்சிக்கும் வகையில் சுப்மன் கில் தனது ட்விட்டர் பக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் சர்ச்சையான நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஊதியத்தில் 15% அபராதம் விதித்துள்ளது. இது தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now