
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பேட்டர்களை நிலைகுலைய வைத்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியானது முதல்நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து பறிதாபமான நிலையில் உள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரகள் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களைச் சேர்த்து அணியின் நம்பிக்கையாக களத்தில் உள்ளார். இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் ஒரே ஓவரில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன்படி இன்னிங்ஸின் 7அவது ஓவரை காகிசோ ரபாடா விசிய நிலையில் அந்த ஓவரை உஸ்மான் கவாஜா எதிர்கொண்டார்.