
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜீன் 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. லண்டனின் ஓவலில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கடந்த கால விராட் கோலியை பார்ப்பது கடினம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து பேசிய அவர், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வெற்றி பெறுவதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முக்கிய காரணிகளாக இருப்பார்கள். கடந்த கால விராட் கோலியினை பார்ப்பது இனி கடினம். அவர் மீண்டும் தன்னுடைய சிறப்பான ஃபார்முக்கு வந்துவிட்டார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
அதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்திய அணியின் பேட்டிங்குக்கு வலிமை சேர்ப்பார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வித்தியாசமானது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து ஆடுகளங்களின் தன்மை வித்தியாசமாக இருக்கும்.