
Yashasvi Jaiswal Record: பர்மிங்ஹாம் டெஸ்டில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களை எடுத்ததன் மூலம் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்ததுடன், மற்றுமொரு சாதனையையும் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் கேல் ராகுல் 2 ரன்னிலும், கருண் நயர் 31 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி சேனா நாடுகளில் தொடக்க வீரராக அதிக அரைசதங்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார். முன்னதாக ரோறித் சர்மா 4 அரைசதங்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 முறை அரைசதம் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.