பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நெஹால் வதேரா அதிரடியாக விளையாடி 70 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ஷஷாங்க் சிங் 59 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களையும் வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இன்னிங்ஸின் போது, அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் முதல் ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் ஓவரில் அதிக ஐபிஎல் சிக்ஸர்கள்
- 13 - ரோஹித் சர்மா
- 12 - வீரேந்தர் சேவாக்
- 12 - கிறிஸ் கெய்ல்
- 11 - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- 11 - விராட் கோலி
இதுதவிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிகபட்சமாக 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் யஷஸ்வி கூட்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த சாதனையை இரண்டாவது முறையாக எட்டுவதன் மூலம், அவர் ஜோஸ் பட்லர் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2023 ஆம் ஆண்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
ஒரு ஐபிஎல் சீசனில் 500+ ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்
- 2 முறை* – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2023/25)
- 2 முறை – ஜோஸ் பட்லர் (2018/22)
- 2 முறை – அஜிங்க்யா ரஹானே (2012/15)
- 1 முறை – சஞ்சு சாம்சன் (2024)
- 1 முறை - ரியான் பராக் (2024)
Win Big, Make Your Cricket Tales Now