Advertisement

அரையிறுதி போட்டிக்கான மும்பை ரஞ்சி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்ப்பு!

விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement
அரையிறுதி போட்டிக்கான மும்பை ரஞ்சி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்ப்பு!
அரையிறுதி போட்டிக்கான மும்பை ரஞ்சி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்ப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 14, 2025 • 08:39 AM

இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, விதர்பா, கேரளா மற்றும் குஜராத் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 14, 2025 • 08:39 AM

இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மும்பை அணியின் பேட்டிங் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

முன்னதாக சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அப்போட்டியில் அவர் சோபிக்க தவறிய நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் விடுவிடுக்கப்பட்டார். இருப்பினும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கூடுதல் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்திய அணிக்கு தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் துபாய் செல்வார்கள் என்பதால், தற்போது இருவரும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த ஆயத்தமாகி வருகின்றனர். முன்னதாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில் அதில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். அதேசமயம் ஷிவம் தூபே காலிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை வீரர்கள்: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த், ஹர்திக் தோமர், சூர்யான்ஷ் ஷேட்ஜ், ஷர்துல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டி'சோசா, ராய்ஸ்டன் டைஸ், அதர்வ் அங்கோலேகர், ஹர்ஷ் தன்னா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement