-lg-mdl.jpg)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவ்ரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று முடிந்தது.
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்துள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்ற் வெளியிட்டுள்ளது. இதில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் முதலிடத்தை தக்கவைத்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி சாதித்துள்ளது.