Advertisement
Advertisement
Advertisement

ஷுப்மன் கில்லை 3ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

என்னைப் பொறுத்த வரை ஜெய்ஸ்வால் – ருதுராஜ் தொடக்க வீரர்களாகவும் ஷுப்மன் கில் 3ஆவது இடத்திலும் விளையாடலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 09, 2023 • 12:54 PM
ஷுப்மன் கில்லை 3ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஷுப்மன் கில்லை 3ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் நாளை தொடங்குகிறது.

இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்த ஷுப்மன் கில் இத்தொடரில் விளையாட உள்ளதால் ஓப்பனிங் ஜோடியில் களமிறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Trending


இந்நிலையில் ஆஸ்திரேலிய டி20 தொடரில் இந்தியா வெற்றிக்கு உதவிய ருதுராஜ் – ஜெய்ஸ்வால் ஜோடி தென் ஆப்பிரிக்க தொடரிலும்  தொடக்க வீரர்களாக களமிறங்கலாம் என்று முன்னாள் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதாவது கடந்த தொடரில் விளையாடிய ஓப்பனிங் ஜோடியை பிரிக்க வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர்ஷுப்மன் கில் 3ஆவது இடத்தில் விளையாடலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஜெய்ஸ்வால் – ருதுராஜ் ஓப்பனிங் ஜோடியை தொல்லை செய்வதற்கு இந்திய அணி நிர்வாகம் நினைக்குமா? ஏனெனில் ஷுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடிய ரெக்கார்டை கொண்டுள்ளார். ஆனால் என்னைப் பொறுத்த வரை ஜெய்ஸ்வால் – ருதுராஜ் தொடக்க வீரர்களாகவும் ஷுப்மன் கில் 3ஆவது இடத்திலும் விளையாடலாம்.

அவர்களைத் தொடர்ந்து 4ஆவது இடத்தில் சூர்யகுமார் யாதவை நான் தேர்ந்தெடுப்பேன். அதை தொடர்ந்து உங்களுக்கு திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உங்களுடைய பேட்டிங் வரிசையில் இருப்பார்கள். இவர்களைக் கொண்ட பேட்டிங் வரிசை மிகச் சிறந்த ஆழத்தை கொண்டுள்ளது. ஆனால் இந்த வீரர்களை தேர்வு செய்தால் உங்களால் எப்படி இஷான் கிஷானை கொண்டு வர முடியும் என்பது எனக்கே தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement