
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியில் தழுவியது.
இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா அணியில் உடல் தகுதி இல்லாமல் பல வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடத்தியது. இதில் ரோஹித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், சேத்தன் சர்மா பி சி சி ஐ தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடிக்கடி காயம் ஏற்படும் வீரர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் சீனியர் வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பும்ரா, முகமது சமி போன்ற வீரர்கள் டெஸ்ட் அணியில் முக்கிய பங்கு ஆற்ற கூடியவர்கள்.