
கவுண்டி கிரிக்கெட்: யார்க்ஷயர் அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பாகிஸ்தானின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் தொடக்க வீரராகவும் அறியப்படுபவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக இதுவரை 23 டி20 போட்டிகளிலும் 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிவுள்ளார். இந்நிலையில் தான் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ருதுராஜ் கெய்க்வாட் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதன் மூலம் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் யார்க்ஷயர் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக யார்க்ஷயருடனான கவுண்டி சாம்பியன்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவர் எந்த காரணத்திற்காக இதிலிருந்து விலகினார் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.