சூர்யகுமார் யாதவை பின் வரிசையில் களம் இறக்கியது துரதிஷ்டவசமானது - அஜய் ஜடேஜா!
4ஆம் இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு வீரர் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் போது அவரை ஏழாவது இடத்தில் களம் இறங்குவது சரியான அணுகுமுறை இல்லை என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் போட்டி தொடரை வென்றது ஆஸ்திரேலியா. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் சிறப்பாக இல்லை என்றே கூறலாம்.
முதலாவது ஒரு நாள் போட்டியில் கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வழங்கினர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் அக்சர் பட்டேல் தவிர வேற எந்த பேட்ஸ்மேன் ரன் குவிக்கவில்லை. மூன்றாவது போட்டியில் எல்லா வீரர்களும் துவக்கத்தை பெற்றிருந்தாலும் அதனை ஒரு பெரிய இலக்காக மாற்றி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதில் தோல்வி அடைந்தனர்.
Trending
குறிப்பாக டி20 போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வருபவர் சூரியகுமார் யாதவ். இவர் கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்தே ஒரு நாள் போட்டிகளில் தடுமாறி வருகிறார். இந்தத் தொடரில் மூன்று போட்டிகளிலும் முதல் பந்திலையே ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது பற்றி பேசி இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா. அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவை நான்காவது இடத்திலேயே களமிறக்கி இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். ஃபார்மில் இல்லாத ஒரு ஆட்டக்காரரை பின்னிறக்கி ஆட செய்வது அவரது நம்பிக்கையை குறைக்கும் ஒரு செயல் என குறிப்பிட்டு இருக்கிறார் அஜய் ஜடேஜா.
இதுகுறித்து பேசிய அஜய் ஜடேஜா, “நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரு ஆட்டக்காரரை எந்த இடத்தில் களம் இறக்கினாலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் நல்ல ஃபார்ம் இல்லாத ஒரு ஆட்டக்காரரை பின் வரிசையில் களம் இறக்குவது என்பது அவரது மனதில் பல்வேறு வித சந்தேகங்களை ஏற்படுத்தும். இது அந்த வீரரின் ஆட்டத்திறனை பாதிக்கும். இதே சூரியகுமார் யாதவ் தான் உங்களுக்கு 360 டிகிரியில் ரன்களைச் சேர்த்தார் என்பது நினைவிருக்க வேண்டும்.
4ஆம் இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு வீரர் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் போது அவரை ஏழாவது இடத்தில் களம் இறங்குவது சரியான அணுகுமுறை இல்லை. ஒரு வீரர் மிகவும் கம்போர்ட் ஆக உணர்வது மேல் வரிசையில் பேட்டிங் ஆடும் போது தான். அவர் டாப் ஆர்டரில் ஆடி இருந்தால் ஒருவேளை இரண்களை குவித்திருக்கலாம். அந்த நேரத்தில் போட்டியில் எந்த விதமான அழுத்தமும் இல்லை. இது அவர் பாமுக்கு வருவதற்கு ஒரு வாய்ப்பாக கூட அமைந்திருக்கலாம். ஆனால் அணி நிர்வாகம் அவரை பின் வரிசையில் களம் இறக்கியது துரதிஷ்டவசமானது” என தெரிவித்திருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now