ரோஹித்தின் ஃபார்மைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை -ஹர்திக் பாண்டியா!
ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் விதம், வெளியில் இருந்து ஒரு நிம்மதியைத் தருகிறது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் முந்தைய தோல்விக்கும் மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நாங்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்தவரை, இது அதிக ஸ்கோரிங் கொண்ட ஆட்டமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் விதம், வெளியில் இருந்து ஒரு நிம்மதியைத் தருகிறது. ரோஹித்தின் ஃபார்மைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர் தனது ஃபார்மில் இருக்கும் போது எதிரணி ஆட்டத்திலிருந்து வெளியேறும் என்பது எங்களுக்குத் தெரியும்.
Also Read
சூர்யா பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது, அவர்களுடைய பார்ட்னர்ஷிப் எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது. நாங்கள் எளிமையான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை விட்டுகொடுத்த நிலையிலும், இறுதில் நாங்கள் அவர்களை 180 ரன்களுக்குள் சுருட்டியது மகிழ்ச்சியளித்தது. நாங்கள் வெற்றி பெறுவதற்கு வெகு தொலைவில் இல்லை என்று நினைக்கிறேன், ஆனால் நாங்கள் விஷயங்களை ஒன்றாக இணைக்க வேண்டிவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்துமுதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்களையும், ஷிவம் தூபே 50 ரன்களையும், அறிமுக வீரர் ஆயூஷ் மாத்ரே 32 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 24 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 77 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now