Advertisement

கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - ரோஹித் சர்மா!

இந்த போட்டியில் நான் ரன் அவுட்டானது எதிர்பாராத விதமாக நடந்தது. கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 12, 2024 • 11:19 AM
கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - ரோஹித் சர்மா!
கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - ரோஹித் சர்மா! (Image Source: Google)
Advertisement

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது ஜனவரி 11ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றஇந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் சார்பாக அனுபவ வீரர் முகமது நபி 42 ரன்களை குவித்தார். பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணியானது 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங்கில் 40 பந்துகளை சந்தித்த ஷிவம் துபே 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்து அசத்தினார்.

Trending


இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “உண்மையிலேயே இங்கு குளிர் அதிகமாக இருக்கிறது. ஆனால் தற்போது பரவாயில்லை என்று நினைக்கிறேன். இந்த போட்டியின் ஆரம்பத்தில் பந்து எனது விரலில் படும்போது சற்று வலியை உணர்ந்தேன். ஆனால் தற்போது அனைத்தும் நலமாக இருக்கிறது.

இந்த போட்டியில் இருந்து நிறைய பாசிட்டிவான விடயங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். குறிப்பாக பந்துவீச்சில் நமது அணியின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த போட்டியில் நான் ரன் அவுட்டானது எதிர்பாராத விதமாக நடந்தது. கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான்.

நான் ஆட்டமிழந்து வெளியேறியதும் ஷுப்மன் கில் போட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர். இறுதியில் ரிங்கு சிங் தனது சிறப்பான பார்மை வெளிப்பாட்டினார். இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement