Advertisement

விராட் கோலிக்காக உருக்கமான கடிதம் அனுப்பிய யுவராஜ் சிங்!

இந்திய அணியில் விராட் கோலி கம்பேக் கொடுத்திருப்பதற்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஸ்பெஷல் பரிசை வழங்கியுள்ளார்.

Advertisement
You have elevated your level of cricket every year: Yuvraj Singh to Virat Kohli
You have elevated your level of cricket every year: Yuvraj Singh to Virat Kohli (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 22, 2022 • 01:00 PM

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு விராட் கோலி பெரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவரின் பேட்டிங்கிலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில போட்டிகளாக கோலியின் கம்பேக் அசரவைத்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 22, 2022 • 01:00 PM

குறிப்பாக டி20 தொடரில் முதல் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கோலி குறைந்த ஸ்கோருக்கு அவுட்டாகி வெளியேறினார். ஆனால் 2ஆவது போட்டியில் பழைய விண்டேஜ் கோலியை நம்மால் பார்க்க முடிந்தது. மீண்டும் அதே கிளாசிக் ஷாட்களால் அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் திரும்பி வந்துட்டேனு சொல்லு என்பது போல கோலியின் ஃபார்ம் இருக்கிறது.

Trending

இந்நிலையில் அதற்காக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், “விராட், நீ கிரிக்கெட்டில் எப்படி வளர்ந்து வந்தாய் என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் சேர்ந்து பயணித்த அந்த பொடிப்பையன் கோலி இன்று புதிய தலைமுறையையே வழிநடத்தும் ஜாம்பவானாக உருவெடுத்திருக்கிறாய்.

களத்தில் உன்னுடைய உத்வேகம் மற்றும் ஆர்வம் ஆகியவை ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்திய அணி ஜெர்ஸியை அணிய வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்திய கிரிக்கெட்டை வேறு ஒரு தரத்திற்கு நீ எடுத்துச்சென்றுள்ளாய். கேப்டன்சியில் ஜாம்பவானாக இருந்த உன்னை இனி பழைய ரன் சேஸிங் மிஷன் கோலி போன்று பார்க்க ஆவலுடன் உள்ளேன்.

 

உனது தோழனாக அணிக்குள் எப்போதும் இருந்திருக்கிறேன். ஆட்டம், பாட்டம், சமையல் என எத்தனையோ நினைவலைகள் உள்ளன. எனவே அப்போது இருந்த அதே நெருப்பு இன்னும் உன்னுள்ளேயே இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் நீ ஒரு சூப்பர் ஸ்டார் தான், நாட்டை பெருமைப்படுத்து” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement